அடுத்த சீசனுக்கான பிக் பாஷ் லீக் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை மீண்டும் ஒப்பந்தம் செய்தது பிக் பாஷ் லீக் சாம்பியன்ஸ் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ். பில்லி ஸ்டான்லேக் மற்றும் மைகேல் நேசர் ஆகியோரும் அடுத்த மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கடந்த வருட ஐபில் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அற்புதமாக செயல்பட்டதால் இளம் வீரருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது. இதனால், பிக் பாஷ் லீக், கரிபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்ற டி20 தொடர்களில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த வருட பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ரஷீத் கான் அற்புதமாக செயல்பட்டு 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருது யார் வெல்வார் என பிக் பாஷ் லீக் நடத்திய கருத்து கணிப்பில், ரஷீத் கான் தான் முதல் இடத்தை பிடித்தார். சமீபத்தில், ஒருநாள் மற்றும் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் ரஷீத் கான்.
பென் லாப்லின், ஜேக் லெஹ்மன் மற்றும் லியாம் ஓ’கானர் ஆடியோர் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அஸ்டோன் அகரின் சகோதரர் வெஸ் அகர் அடுத்த வருடம் நடைபெறும் சீசனில் மீண்டும் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுவார்..