இந்திய அணியால் கூட செய்ய முடியாத சாதனையை அசால்டாக செய்த ஆப்கன் வீரர்கள்!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 வெற்றியை ருசித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

வங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிப்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

இதன்மூலம் குறைவான போட்டிகளில் 50 வெற்றியை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

நேற்றைய வெற்றியின் மூலம் 72 போட்டிகளில் 50 வெற்றிகளை வெற்று சாதனைப் படைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 83 போட்டிகளிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 84 போட்டிகளிலும், இலங்கை 92 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 97 போட்டிகளிலும், நியூசிலாந்து 99 போட்டிகளிலும், இங்கிலாந்து 105 போட்டிகளிலும் 50 வெற்றிகளை பெற்றன.

மேலும் இந்த போட்டியில்,

90/4 என்று இருந்த ஆப்கான் அணியை மீட்டது முகமது நபி, ஸத்ரான் ஆகியோர்தான் இவர்கள் கூட்டணியில் முக்கியமான அந்தத் தருணம் 17 மற்றும் 18வது ஓவர்களில் நிகழ்ந்தது.

டெண்டாய் சதாரா ஓவரில் நபி 4 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தார், அடுத்த ஓவரை நெவில் மாட்சிவா வீச ஸத்ரான் முதல் 3 பந்துகளை சிக்சர்களுக்கு விரட்ட தொடர்ச்சியாக 7 சிக்சர்களை விளாசினர். அடுத்த பந்து வைடாக அமைய, அடுத்த பந்தையும் ஸத்ரான் தொடர் 8வது சிக்சருக்கு தூக்கி அடித்தார், ஆனால் பாயிண்ட் பவுண்டரியில் பந்து எல்லைக்கோட்டுக்கு சற்று அருகில் பிட்ச் ஆகி 4 ரன்களானது ரிவியூவில் தெரிந்தது.

முன்னதாக தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 43 ரன்கள் எடுத்தது அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது, ஆனால் இவர் சான் வில்லியம்சின் (2-16) அருமையான பந்து வீச்சில் எல்.பி.ஆனார்.

ஜிம்பாப்வே விரட்டல் 4ம் ஓவரில் சிக்கலுக்குள்ளானது, இந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது. ப்ரெண்டன் டெய்லரை 27 ரன்களுக்கும் சான் வில்லியம்சை டக்கிலும் வெளியேற்றினார் ஃபரீத் அகமட். கேப்டன் மசகாட்ஸா ஏற்கெனவே ரன் அவுட் ஆனதையடுத்து ஜிம்பாப்வே 30/3 என்று சரிந்தது. ஆனால் ரெஜிஸ் சபாக்வா போராட்டத்தை ஆப்கான் அணிக்கு எதிராக கொண்டு சென்று 42 ரன்களை ஆக்ரோஷமாக எடுத்தார். ஆனால் ரஷீத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜிம்பாப்வே இலக்கை விரட்டும் நிலையிலேயே இல்லை.

வங்கதேச அணி, ஆப்கான் அணியை இன்று சந்திக்கிறது.

Sathish Kumar:

This website uses cookies.