ஆப்கன் கிரிக்கெட்டின் அடுத்த மைல்கல்

சமீப காலமாக பல தொடர் வெற்றிகளை குவித்து வரும்  ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிகெட்டில் டெஸ்ட் போட்டிகளை நடத்த மற்றும் பங்கு பெற சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஐசிசியின் முழு உறுப்பினர் அந்தஸ்த்தும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சமீப கால வெற்றிகள்:

  • 2104இல் பங்ளாதேசுடனான போட்டியில் பங்க்ளாதேசை 32 ரன் வித்யாசத்தில் வீழ்த்தியது
  • இன்டர்கான்டினன்ட்டல் (ஐசிசி இன் முதல் தர போட்டி) கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது
  • மேற்கிந்திய தீவுகளை இருபது ஓவர் உலககோப்பையில் வீழ்த்தியது

   இந்த அணி 2009இல் தான் ஒரு நாள் போட்டிக்கான தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது ,பின்னர் 2105இல்   உலககோப்பையிலும் விளையாடும் தகுதியும் பெற்றது. 17 வருடங்களுக்கு பின்பு ஒரு ஐசிசி இணை அணி ஒன்று டெஸ்ட் விளையாட தகுதி பெறுவதும் இதுவே முதன் முறை. முன்னதாக பங்களதேஸ் அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 22ஆம் தேதி துபாயில் நடைபெற்ற ஆண்டு இறுதி மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது. அத்துடன் அயர்லாந்து அணியும் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி இந்த நேரத்தில் ஜிம்பாப்வே சுற்றுபயணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதில் மூன்று டெஸ்ட்,ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளும் அடங்கும்.

சுழ்ற்பந்து வீச்சாளர் ரஷிட் கான்  ஆல் ரவுண்டர்  ஹம்மத் நபி ஆகியோர் இந்தியன் பிரிமியர் லீக்கில் ஆடிய அனுபவம் பெற்ற

ஆப்கனிஸ்தானின் அடுத்த பயணம்

வர்கள். அவர்களுடய அந்த அனுபவம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்யவுள்ள அந்த அணிக்கு பக்கபலமாக அமையும்.

டெஸ்ட் அந்தஸ்த்து பெறுவதினால் ஆப்கன் அணி சர்வ்தேச கிரிக்கெட் கௌன்சிலிடம் இருந்து சுமார் 40 மில்லியன் டால்ர்கள் வருமானமாக பெரும்.அதாவது இந்திய மதிப்பில் சுமார் 256 கோடி ரூபாய்கள். அந்த வருமானம் அந்த நாட்டில் கிரிக்கெட் அமைப்பை மேம்படுத்த் உதவும் வண்ணம் அளிக்கப்பட்டுள்ளது.

(Photo Source: Getty Images)

ஆப்கன் அணி ஜிம்பாபவேயுடன் டெஸ்ட் விளையாடும் பட்ச்சத்தில் அது   சர்வதேச அளவில் இதுவரை டெஸ்ட் விளையாடிய அணிகளில் 11வது அணியாகும் மற்றும் தனது முதல் டெஸ்ட் போட்டியயை வெளிநாட்டில் துவங்கிய அணிகளில் ஆப்கன் 6 வது அணியாகும். வேர்ல்டு லெவன் அணியும் தனது முதல் டெஸ்ட் போட்டியயை வெளிநாட்டு மண்ணில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியா,பாக்கிஸ்தான்,இங்கிலாந்து மற்றும் மேற்க்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும் தனது முதல் டெஸ்ட் போட்டியயை வெளிநாட்டு மண்ணில்தான் அரங்கேற்றின.

வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணம் ஆப்கானத்தை கிரிக்கெட்டில் ஒரு வளரும் நாடாக மாற்றியுள்ளது. ஆப்கானம் மற்றும் ஆயர்லாந்து அணிகள் மென்மேலும் வளர பாராட்டுவோம் நாம் அனைவரும்.

Editor:

This website uses cookies.