அறிமுகமாகிறது ஆஃப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி.20 தொடர்
ஆப்கன் பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை நடத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதே பாணியில் டி20 போட்டிகளை நடத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (அ) ’ஏபிஎல்’ எனப் பெயர் வைத்துள்ளது.
இந்தப் போட்டிகள் நடப்பாண்டின் அக்டோபர் 5 முதல் 21 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக பேசியுள்ள ஆப்கன் விக்கெட் கீப்பர் முகமது ஷஸாத், தானும் தனது அணியினரும் உலகின் பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் பங்களிப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
முக்கியமாக கிறிஸ் கெய்ல், ஷன் வாட்சன் உள்ளிட்டோர் ஏபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இதுவரை 40 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
இந்திய வீரர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளனர். ஆப்கன் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷுக்ருல்லா அடிப் மஷல் பேசுகையில், சர்வதேச வீரர்களின் பங்களிப்பால் ஆப்கன் பிரீமியர் லீக் மிகவும் பிரபலமடையும்.