ஆப்கானிஸ்தான் அணிக்கு அடித்த மாபெரும் லக் ! ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த டெஸ்ட் !
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2009ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறது. மற்ற அணிகளைப் போல் அல்லாது சீக்கிரமாக விடுவிடுவென சர்வதேச அளவில் வளர்ந்த அணி ஆப்கானிஸ்தான். அந்த நாடு போரினால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரியாக கிரிக்கெட்டுக்கு என்று உள்கட்டமைப்பு வசதி இல்லாத ஒரு நாடாக இருந்தாலும், தங்களுக்கு கிடைத்த வசதியை பயன்படுத்தி ரஷீத் கான், முகமது நபி போன்ற சர்வதேச தரத்திலான வீரர்கள் அந்த நாட்டிலிருந்து உருவாக்கி இருக்கிறார்.
இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்களாகவும் இருக்கின்றனர். வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் கூட ஐபிஎல் அணிகள் விளையாட தேர்வு செய்யப்படாத நிலையில் அவர் அணியிலிருந்து விளையாட இந்த இருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய அமைந்திருக்கிறது.
2014 ஆம் ஆண்டு 2016 ஆம் ஆண்டு என அடுத்தடுத்து டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்த அணி தகுதி பெற்றது அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் பல பெரிய ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி அதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஐசிசி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அந்தஸ்தை கொடுத்தது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய நாட்டிலுள்ள ஒரு மைதானத்தை அதற்கான சொந்த மைதானமாக விளையாட அனுமதி இருக்கிறது. இதன் காரணமாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தான் கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்த டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி முடிவு செய்திருக்கிறது. இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் கொரானா வைரஸ் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதால் இந்த டெஸ்ட் போட்டி திட்டமிடப்பட்டவை தாண்டி அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்படும்.