ரவி சாஸ்திரியுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டிங் ஆலோசகரில் இருந்து ராகுல் திராவிட் விலகினார்: சவுரவ் கங்குலி அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி யடைந்த இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த தோல்வியால் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என தாரை வார்த்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை கேப்டன் விராட் கோலி மட்டுமே பேட்டிங்கில் சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். மற்ற அனைத்து பேட்ஸ் மேன்களுமே சிறப்பாக செயல்படத் தவறியுள்ளனர்.

இதற்கிடையே இந்திய அணி யின் பேட்டிங் சீர்குலைவுக்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சி யாளர் சஞ்சய் பங்கரும் பொறுப் பேற்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் குறித்து சில முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்காவிட்டால், வெளிநாடு களில் சென்று தொடரை வெல்ல முடியாது என முன்னாள் கேப்ட னான சவுரவ் கங்குலி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித் திருந்தார்.

அப்போது அவர், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது ராகுல் திராவிட்டை பேட்டிங் ஆலோசகராக நியமிக்க விரும்பிய தாகவும், ஆனால் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பலன் இல்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லட்சுமண் ஆகியோர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்த பின்னர் வெளிநாட்டு சுற்றுப்பயணங் களில் ராகுல் திராவிட்டை பேட்டிங் ஆலோசகராவும், ஜாகீர்கானை பந்து வீச்சு ஆலோசகராகவும் நிய மிக்க பரிந்துரை செய்தனர். ஆனால் பிசிசிஐ அமைப்பை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக் கப்பட்ட குழுவானது ரவி சாஸ்திரி நியமனத்தை மட்டுமே உறுதி செய்தது.

இதுதொடர்பாக கங்குலி தற்போது கூறுகையில், பேட்டிங் ஆலோசகராக இருக்கும்படி ராகுல் திராவிட்டை கேட்டுக் கொண்டோம். அவரும் அதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர், ரவி சாஸ்திரியிடம் பேசினார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. பிசிசிஐ நிர் வாகக்குழுவும் பயிற்சியாளர் தேர் வில் குழப்பத்தை சேர்த்தது. அதனால் நாங்கள் சோர்வடைந் தோம். அதன் பின்னர் அதில் இருந்து நாங்கள் வெளியே வந்துவிட்டோம்.

அதனால் பேட்டிங் ஆலோச கராக இருக்க ராகுல் திராவிட் ஏன் வரவில்லை என்பது குறித்து நான் சொல்வது கடினம். ஆனால் ரவி சாஸ்திரியிடம் பொறுப்பு வழங் கப்பட்டிருந்தால் விராட் கோலி யிடம் ஆலோசனை நடத்திய பிறகு, பொறுப்பை நிறைவேற்றி அணியை மேம்படுத்த வேண்டும்” என்றார்.

பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், அனில் கும்ப்ளேவுக்கு ஒருவருட கால ஒப்பந்தமே வழங்கப்பட்டிருந்தது. பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்ற பின்னர், ஒரு மாதத்துக்கு பின்னரே அனில் கும்ப்ளேவின் ஒப்பந்தம் காலாவதி யானதை அறிந்தோம். அவரது நியமனத்தின் போது கடைபிடிக்கப் பட்ட நெறிமுறைகளையே நாங்கள் தொடர்ந்தோம்.

அனில் கும்ப்ளே அசாதாரண சூழ்நிலையில் வெளியேற்றப்பட வில்லை. அவரது ஒப்பந்த காலம் ஒரு வருடம்தான். ஜாகீர்கான் அல்லது ராகுல் திராவிட் நியமனம் தொடர்பாக நாங்கள் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. எங்களது பணி தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது மட்டுமாகவே இருந்தது’‘ என்றார்.

Vignesh G:

This website uses cookies.