டெல்லி கேப்பிடல் அணியில் தற்போது இரண்டு ஆல்ரவுண்டர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் அவர்கள் காயம் அடைந்ததால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது. இவர்கள் யார் என்று தற்போது வரை பெயர் தெரிவிக்கவில்லை. மேலும் கொல்கத்தா மைதானத்தில் அடுத்த வீரர்களை கண்டுபிடிக்க பயிற்சி நடைபெறும் எனவும், அந்த பயிற்சியில் பண்டிங் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் மாற்று வீரர்களை தேர்வு செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் மனோஜ் திவாரி கலந்து கொண்டு டெல்லி அணிக்காக தேர்வாகி ஆட உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில்,
தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்-க்குப் பதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ கெல்லியை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்-யை ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இளம் வீரரான இவர் இலங்கை அணிக்கெதிராக விளையாடும்போது காயம் அடைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
அவருக்கு மாற்று வீரரை இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ கெல்லியை தேர்வு செய்துள்ளது. இவர் ஆஸ்திரேலிய சர்வதேச அணிக்காக விளையாடியது கிடையாது. பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக விளையாடியவர்.
சனிக்கிழமை தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெல்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யாராவது மீண்டு வரவில்லையென்றால் கெல்லியை உலகக் கோப்பைக்குக்கூட தேர்வு செய்யலாம் என மார்க் வாஹ் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய டி20 ஆட்டங்களில் இறுதி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுபவர் என்கிற அடையாளம் உள்ளதால் கெல்லி கேகேஆர் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.