ஜிம்பாப்வே அணி வீரரின் கோரிக்கையை ஏற்று ஸ்பான்சர் செய்ய முன்வந்த பூமா கம்பனி
ஜிம்பாவே அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல். இவர் இதுவரை ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச அளவில் 18 ஒருநாள் போட்டிகளிலும் 25 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இருப்பினும் தனக்கு எந்தவித ஸ்பான்சர் கிடைக்காத காரணத்தினால் ஒரே ஷூவை அவர் பயன்படுத்தி வருகிறார். இதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட பதிவுக்கு பிரபல நிறுவனமான பூமா பதில் அளித்துள்ளது.
ரியான் பர்ல் பதிவிட்ட சோகமான பதிவு
சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் ரியான், தனது பிய்ந்து போன ஒரு காலனி, அதை ஒட்டுவதற்கான பசை மற்றும் ஷூ வை பசையிட்டு ஒட்டுவதற்கான கருவிகளை வைத்து ஒரு புகைப்படம் எடுத்து பதிவிட்டார். அந்தப் புகைப்படத்துடன், ஒவ்வொரு போட்டி முடிந்தவுடன் எனது காலணியை மறுபடி மறுபடி நாங்கள் ஒட்டி மிகவும் சிரமப்படுகிறோம். எனவே ஒரு நல்ல ஸ்பான்சர் எங்கள் அணிக்கு கிடைத்தால் இந்த சிரமம் மறுபடியும் இருக்காது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை கண்ட பிரபல காலனி நிறுவனமான பூமா, கவலை வேண்டாம் எங்களுடைய அணி உங்களுக்கு ஸ்பான்சர் அணியாக இருக்கும் என்று பதிலளித்துள்ளது. அந்த நிறுவனம் தற்பொழுது அளித்துள்ள பதிலால் பல கிரிக்கெட் ரசிகர்கள் அந்த நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.
பல ஆண்டு காலமாக தடுமாற்றத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணி
ஜிம்பாப்வே அணியில் ஒரு காலத்தில்
ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர், அலைஸ்டர் கேம்பல், டேவ் ஹாக்டன், ஹீத் ஸ்டீரிக், நீல் ஜான்சன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடி வந்தனர். அப்பொழுது அவருடைய அணி மிக பலமாக இருக்கும். ஆனால் அதற்குப் பின்னர் தற்போது ஒரே ஒரு சிறந்த வீரர்களை உருவாக்க முடியாமல் ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் தடுமாறி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
அதன் காரணமாகவே பல ஸ்பான்சர் நிறுவனங்கள் அந்த அணிக்கு ஸ்பான்சர் செய்ய யோசித்து வருகிறது. ஆனால் தற்பொழுது பூமா நிறுவனம் தானாக முன் வந்து கஷ்டப்படும் வீரருக்கு ஸ்பான்சர் செய்வதாக வாக்களித்தது ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.