போதை மருந்து உபயோகித்து மட்டினர் பாகிஸ்தான் வீரர் முகமது சேஷாத்!!
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது சேஷாத் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உடுகொண்டு தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். போதை மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது.
இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு அல்லது சில போட்டிகளுக்கு அவர் விளையாட தடை செய்யப்படலாம் என தெரிகிறது. தற்போது வரை இந்த விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரையில் உள்ளது. ஐசிசி நிர்வாகத்திற்கு கொண்டு செல்லபடவில்லை.
தற்போது அகமது சேஷாத்திடம் விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்டுள்ளது. இந்த குழுவின் விசாரணை அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
மேலும், பாகிஸ்தான் நாட்டின் போதை மருந்து தடுப்பு பிரிவு இவரது மாதிரிகளை சோதனை செய்து முடிவுகளை வேகியிட வேண்டும். அப்படி அவர் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவருக்கு 3 மாதம் அல்லது 5 ஒருநாள் போட்டிகள் இல்லை 2 டெஸ்ட் அல்லது 5 டி20 போட்டிகள் தடை செய்யப்படலாம்
இதற்கு முன்னதாக,
இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்திய புகாரில் பிசிசிஐ 5 மாதங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியதாக அவர் மீது கடந்த ஆண்டு புகார் எழுந்தது. அவருக்கு இருமல் இருந்த போது கிரிக்கெட் வீரர்களுக்கான தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை ஊசி மூலம் எடுத்துக்கொண்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி டி20 போட்டியின் போது அவரது சீறுநீரை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.
இதில் அவர் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த யூசப் பதான் அந்த இருமல் மருந்து தடை செய்யப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றார். மேலும் அவருக்கு அறிவுறுத்திய இருமல் மருந்துக்கு பதிலாக தடை செய்யப்பட்ட மருந்தை கொடுத்ததும் நிரூபணமானது.
யூசப் பதானின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ அவருக்கு 5 மாதம் தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த தடையால் யூசப் பதான் ஐ.பி.எல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது.