திடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை
இலங்கை கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான அஜந்தா மெண்டிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக 19 டெஸ்டில் 70 விக்கெட்டும், 87 ஒருநாள் போட்டியில் 152 விக்கெட்டும், 39 டி20 போட்டியில் 66 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
ஒருநாள் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஒரே வீரர் இவர்தான்.
2008 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 3 போட்டியில் 28 விக்கெட்டுக்களும் வீழ்த்தியதும் அவரின் பந்து வீச்சின் சிறப்பை குறிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.