முன்னாள் இந்திய வீரர் அஜய் ராத்ரா மும்பை ரஞ்சி அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கிறார்.
மும்பை கிரிக்கெட் வாரியம் ரஞ்சி அணி மற்றும் அண்டர் 19 அணிக்கான பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப கெடு வித்திருந்தது. இந்த கெடு ஜெல்லி 3ம் தேதி உடன் முடிவடைந்தது. இதற்க்கான விண்ணப்பங்கள் நிறைய வந்துள்ளது. விரைவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் அந்த வாரியம் தெரிவித்திருந்தது.
முத்த அணியின் பயிற்சியாளர் பணிக்கு இந்திய அணியின் முன்னாள் கீப்பர் அஜய் ராத்ரா, இந்திய அணியின் ஆப் – ஸ்பின்னர் ரமேஷ் பவார் மற்றும் முபை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விநாயக் சமந்த் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.
அஜய் ராத்ரா பஞ்சாப் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு வரை இருந்து வந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு இன்னும் தெளிவாகவில்லை, பஞ்சாப் வாரியம் என்னை தக்க வைத்துக்கொள்கிறார்களா இல்லையா என்று. நான் வாரியத்திடம் கேட்டதற்கு இன்னும் தேதிகள் முடிவாகவில்லை இனி தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அலட்சியமாக கூறுகின்றனர்.
இந்நிலையில் தான் மும்பை வாரியாயத்தின் அழைப்பை கவனித்தேன், எந்தவித தயக்கமும் இன்றி விண்ணப்பித்துவிட்டேன் என தெரிவித்தார். மும்பை அணி மிகப்பெரிய அணி அதற்க்கு எனது பங்களிப்பை தருவது எனக்கு மிகப்பெருமையான விஷயம். நிச்சயம் எனது முழு அனுபவத்தையும் அளிப்பேன் என கூறினார்.
இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளும், 12 ஒருநாள் போட்டிகளும் ஆடியுள்ள ராத்ரா, ஹரியானா அணிக்காக 15 ஆண்டுகள் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். 2012-13 ரஞ்சி சீசனில் தான் ஓய்வு பெற்றார்.
கடந்த காலத்தில் மும்பை அணிக்கு ஸ்பின் ஆலோசகராக செயல்பட்ட போவார் மும்பை அணிக்கு பயிற்சிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரது முன்னாள் சக அணி வீரர் சமந்த் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். சமந்த் மும்பை அண்டர் 23 அணிக்கு பயிற்சி அளித்துள்ளார்.
முன்னாள் ஸ்பின்னர் காந்தே தேசிய ஜூனியர் தேர்வாளராகவும், ஜொனல் கிரிக்கெட் அகாடமி ஏற்பாடு செய்த முகாம்களில் அமைப்பாளராகவும் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அண்டர் 19 அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 8 விண்ணப்பனால் வந்துள்ளன. அதில் சுரேஷ் ஷெட்டி, விக்ராந்த் கோன்னாட், உஸ்மான் மாவ்வி, பிரதீப் காஸ்லிவால், கிரண் போவார், சந்தீப் தஹத், சந்தோஷ் சக்ஸேனா மற்றும் மனோஜ் ஜோகோக்கார் ஆகியோர் அடங்குவர்.