இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளின் ரகசியத்தை கூறிய ரஹானே

"They have a fine team and some talented players, who have proved themselves in shorter formats. I am sure they are looking forward to do the same in Test cricket. On behalf of the Indian team, I wish them all the best."

இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே இங்கிலாந்து மைதானங்கள் ரகசியங்கள் குறித்தும் அதனை எப்படி கையாள்வது எனவும் கூறியுள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக அட முழு முனைப்புடன் பயிற்சி செய்து வருகிறார்.

தற்போது மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரஹானே, எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் எளிதில் கையாளவே முயல்கிறேன் என்றார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இங்கிலாந்து மைதானம் ஒவ்வொரு 15-20 நிமிடத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும். நினைத்தது நினைத்த மாதிரி தொடர்ந்து நடக்காது. ஓவொரு முறையும் புதிதாக களமிறந்து போல ஆட வேண்டும்.”

மிகவும் குறைவாகவே பேசும் ரஹானே, இந்த தொடர் குறித்து மனம் திறந்துள்ளார். ரஹானே லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம் பெறாதது குறித்து பல்வேறு வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும் இவர் அமைதியாகவே உள்ளார். எனது பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி இறங்க செய்தாலும் எனக்கு எந்த வித கவலையும் இல்லை என தெரிவித்தார்.

“இங்கிலாந்தில் போட்டிகள் நண்பகலில் தொடங்கினாலும், நிலை மாறிக்கொண்டே இருக்கும். அதனால் பொதியவரை பந்தை முன்னதாக ஆடாமல், சிறிது காலதாமதமாக ஆட பழக வேண்டும், இல்லையெனில் உடலுக்கு மிக அருகில் வரும்வரை விட்டு ஆட வேண்டும். அப்பொழுது தான் லேட் ஸ்விங் பந்துகளை சமாளிக்க முடியும்” என கூறினார்.

என்னுடைய பயிற்சியும் அதற்க்கு ஏற்றாற்போல் அமைத்து ஈடுபட்டு வருகிறேன். கடந்த இரண்டு மொன்று தொடர்களில் சரிவர செயல்படவில்லை. இது எனக்கு மிகவும் முக்கியமான தொடர் எனவும் தெரிவித்தார்.

 

 

Vignesh G:

This website uses cookies.