யார்க்கர் சரியாக போடவில்ல்லை : தோல்விக்கு காரணமாக ரகானே கூறுகிறார்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டு ஆட்டத்துக்கு 18 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. பேட்டிங்கை தொடங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வ் ஷா மற்றும் முன்ரோ களமிறங்கினர். முன்ரோ ரன் ஏதும் எடுக்காமல் குல்கர்னி வீசிய பந்தில் ஆட்டமிழக்க கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வ் ஷாவுடன் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தினர். பிரித்வ் ஷா 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த போது கோபால் வீசிய பந்தில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் அய்யர் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த பொது உனாகட் வீசிய பந்தில் அவுட் ஆனார். மிக அற்புதமாக விளையாடிய ரிஷப் பந்து 69 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி பேட்டிங்கை முடித்த சில நேரங்களில் மறுபடியும் மழை குறுக்கிட்டது. எனவே மீண்டு ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. மொத்த ஓவர்கள் 12 ஆக குறைக்கப்பட்டு  ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 151 ரன்களாக குறைக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லரும் ஷார்ட்டும் களமிறங்கினர். பட்லர் டி20 போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியை ஆடினார். சிறப்பாக விளையாடிய பட்லர் 26 பந்துகளில்  சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் அவுட் ஆனார். அடுத்து ஷார்ட்டுடன் சஞ்சு சாம்சன் களத்தில் ஜோடி சேர்ந்தார். சாம்சன் 3 ரன்களுடன் வெளியேற அணிய சரிவிலிருந்து ஷார்ட் மீட்டார்.  அந்த அணி 11 ஓவர்களில் 136 ரண்கள் எடுத்திருந்தது. கடைசி ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால் அந்த அணி 10 ரன்கள் ரன்கள் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் ஆணி வெற்றி பெற்றது.

Editor:

This website uses cookies.