பந்து வீச்சாளர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம் : ரகானே

மும்பை இந்தியன்ஸýக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 72 ரன்கள் சேர்த்தார். அடுத்தபடியாக இஷான் கிஷன் 58 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது.
எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் கிரன் பொலார்டு 21, மயங்க் மார்கன்டே ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3, தவல் குல்கர்னி 2, ஜெயதேவ் உனத்கட் 1 விக்கெட் எடுத்தனர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கியது ராஜஸ்தான் அணி.  அந்த அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ராகனே 14(17) ரன்களும், திரிபாதி 9(8) ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஞ்ஜு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹர்திக் பாண்ட்யா பந்தில் பென் ஸ்டோக்ஸ் 40(27) ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் ஆட வந்த ஜோஸ் பட்லர் 6(8) ரன்களும், சஞ்ஜு சாம்சன் 52(39) ரன்களும் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கிளாசென் 0(1) ரன் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர் ஜொஃப்ரா ஆர்சர் 8(8) ரன்களில் வெளியேற,  கிருஷ்ணப்பா கெளதம் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். தனது அதிரடியை வெளிபடுத்திய இவர் 11 பந்துகளில்  2 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா,  ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், மெக்லினகான், குர்னல் பாண்ட்யா, ரகுமான், 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது வெற்றியை ருசித்தது.

அடுத்து பேட் செய்த ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன.
இறுதிவரை போராடிய கிருஷ்ணப்பா கெளதம், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையிருந்தபோது சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 33, உனத்கட் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் பும்ரா, ஹார்திக் தலா 2 விக்கெட்டுகளும், மெக்லனகன், கிருனால் பாண்டியா, முஸ்டாஃபிஸர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகன் ஆனார்.

Editor:

This website uses cookies.