ஏன் இவ்வளவு மோசமா விளையாடுறாங்க..? முன்னாள் வீரர் வேதனை !!

கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி என அழைக்கப்படும் விராட் கோலி மட்டும் ஏபி டிவில்லியர்ஸ் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு தனது வெளிபாட்டை கொடுக்கவில்லை என்று ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை வெளியிட்டார்.

2020 ஐபிஎல் போட்டி துபாய் அமீரகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட பெங்களூரு அணி கடைசியாக ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஒழுங்காக விளையாடவில்லை.

இதற்கு முக்கிய காரணம் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆர்டர் ஆகும் மற்றும் ஆர்சிபி அணியின்மந்தமான தொடக்கமாகும். பெங்களூர் அணியில் தேவ்தாட் படிக்கள்ளை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொல்லிகொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

விராட் கோலி 7 ரன்களிலும் ஏபி டிவில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பெங்களூர் அணியின் ஒரே ஒரு நம்பிக்கையான விஷயம் தேவ்தாட் படிக்கள் மட்டுமே ஆகும் மற்றும் ஃபிலிப்பே ஓரளவுக்கு விளையாடினார் மற்ற அனைவரும் ஒழுங்காக செயல்படவில்லை இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் அவர் கூறியதாவது விராட் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர் தன் யூடியூப் சேனலில் கூறியிருந்தார்.

Mohamed:

This website uses cookies.