வேறு பெயர் போட்டு ஏமாற்றி விளையாடியதால் அக்தருக்கு வாழ்நாள் தடை!!
கடந்த மாதம் முழுவதும் கிரிக்கெட் உலகம் சோகத்தில் மட்டுமே ஆழ்ந்துள்ளது. சமியின் குடும்ப பிரச்சனை வெளியில் அரங்கேறியது, தென்னாப்பிரிக்க மண்ணில் பால் டேம்பரிங் செய்து மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலியா வீரர்கள், பின்னர் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அழுது புலம்பியது என அடுத்தடுத்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம்.
இந்நிலையில் இந்திய உள்ளூர் வீரர் ஒருவர் தனது பெயரை மாற்றி மாற்றி இந்தியாவின் வெவ்வேறு கிரிக்கெட் லீக்கில் விளையாடி உள்ளார். இதனை கண்டறிந்த மும்பை கிரிக்கெட் வாரியம் அவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து வாழ்நாள் தடை செய்துள்ளது
அந்த வீரரின் பெயர் அக்தர் சாயிக். இவர் மும்பை அணியின் உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ராஜவாடா கிரிக்கெட் தொடரில் வேறு ஒரு பெயரில் விளையாடிவிட்டு, பின்னர் மும்பை பிரிமியர் லீக்கில் வேறு பெயரில் விளையாடி உள்ளார். இதனால் அவரை வாழ்நாள் முழுவதும் மும்பை அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதை தடை செய்துள்ளது மும்பை கிரிக்கெட் வாரியம்.