அகிலா தனஞ்செயா பந்து வீச தடை : ஐசிசி நடவடிக்கை
இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஐசிசி தடைவித்துள்ளது. தடை தற்போதில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். அப்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவரது பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.
அகில தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், டி20-யில் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நவம்பர் 23ஆம் தேதி நடந்த போட்டியில் அவர் பந்தை எறிந்தார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நடுவர் இந்த புகாரை அளித்தார். இதன்பின்னர் ஆஸ்திரேலியா சென்று அங்கு அவரது பந்து வீச்சு முறை பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவில் தாண்டி தனது முழங்கையை மடக்கி பந்து வீசுகிறார் என தெரியவந்தது.
இதன் காரணமாக அவரை ஐசிசி தற்போது தடை பந்துவீச தடை செய்துள்ளது. தற்போது இலங்கைக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் நியூசிலாந்து செல்ல உள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் விளையாட உள்ளது. இந்த மூன்றிலும் பங்கு பெற்றுள்ள அகிலா, இலங்கைக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் டி20 போட்டி நியூசிலாந்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது ஏனெனில் இன்னும் 15 நாட்களுக்குள் அவர் தனது பந்துவீச்சை முறையை சரிசெய்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்து அதற்கு அனுமதி பெறவேண்டு. இதன் காரணமாக அவர் இலங்கைக்கு இன்னும் சில காலங்களாக முடியாது. இது இலங்கைக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இலங்கை அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிதாக எந்த நல்ல செய்தியும் வந்து சேர்ந்த விடவில்லை. நல்லதும் நடந்துவிடவில்லை. 55 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு வெளிநாட்டு அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்து மண்ணைக் கவ்வியது. இலங்கை அணி அதற்கு முன்னதாக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் பலமுறை கிரிக்கெட்டிலிருந்து விளையாட தடை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி இழந்தது தற்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகிறது இவ்வாறாக இலங்கை அணி மேலும் மேலும் பெருகி வருகிறது.