தோனி பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? ஒற்றை வார்த்தையில் அக்தரின் பதில் ! ரசிகர்கள் ஆச்சரியம் !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி பல மறக்கமுடியாத வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டன்சிப், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என அனைத்திலும் சிறந்து விளங்குபவர் தோனி. இவர் 332 போட்டிகளுக்கு இந்தியனின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.
இதில் 178 போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை (2011), டி 20 உலகக் கோப்பை (2007) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய முக்கிய கோப்பைகளை இந்திய அணிக்காக பெற்றுத் தந்துள்ளார்.
இந்திய அணியை போலவே சிஎஸ்கே அணியிலும் எம்எஸ் தோனி கேப்டனாக செயல்பட்டு பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். அதுமட்டுமின்றி மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி எம்எஸ் தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இது எம்எஸ் தோனி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் எம்எஸ் தோனி குறித்து ஒற்றை வார்த்தையில் தனது ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இவர் சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அதுமட்டுமின்றி இவர் தனது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதிலளித்து வருகிறார். அந்தவகையில் நேற்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து ஒற்றை வார்த்தையில் கூறும்படி கேள்வி எழுப்பினார். இதற்கு சோயப் அக்தர் “சகாப்தத்தின் பெயர்” என்று கூறியுள்ளார். இது எம் எஸ் தோனியின் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது சமூக வலைத்தளங்களில் சோயப் அக்தரின் பதில் வைரலாகி வருகிறது. கீழ்காணும் ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் உரையாடலை காணலாம்..,