தென்னாபிரிக்க வீரர் அல்பி மார்கள் ஓய்வு: வீரர்கள் வாழ்த்து

தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மார்கல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தனது தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மார்கல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கிரிக்கெட் ஆடிய அவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு தனது முதல் முதல் தர போட்டியில் ஆடினார் அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் தென்னாபிரிக்கா அணிக்காக ஆட அழைக்கப்பட்டார். மற்றும் ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்துள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். 20 ஓவர் போட்டிகளில் மட்டும் 4,547 ரன்களும் 247 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியுள்ளார் 75 விக்கெட்டுகளும் 974 ரன்கள் குவித்துள்ளார் .

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான அல்பி மோர்கல், ஐபிஎல் தொடர் ஆரம்பம் ஆண்டு முதலே சென்னை அணியின் வெற்றிக்கு பாடுபட்டுள்ளார். முதலாவது ஐபிஎல் தொடரில் $ 675,000 என்ற தொகைக்கு சென்னை அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.

2013ம் ஆண்டு வரை மஞ்சள் வர்ண ஜெர்சியை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அணிந்தார். அந்த காலகட்டத்தில், இந்த அணி இரண்டு ஐபிஎல் பட்டங்களையும் மூன்று இறுதி போட்டிகளுக்கும் தகுதி பெற்று ஒரு சிறந்த அணியாக வலம் வந்தது. அதில் இவரது பங்கும் போற்றத்தக்கது. ஏனென்றால், இவர் பேட்டிங்கில் 827 ரன்களும் பவுலிங்கில் 86 விக்கெட்டுகளும் எடுத்து தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிலைநிறுத்தினார்.

2014ம் ஆண்டில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர் பெங்களூர் அணிக்காக 2.4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானார். அந்த தொடரில் வெறும் 45 ரன்களையும் 4 விக்கெட்களையும் மட்டுமே இவரால் கைப்பற்ற முடிந்தது. பின்னர், அடுத்த ஆண்டு டெல்லி அணிக்காக 30 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 86 ரன்களும் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

அதற்கடுத்த 2016ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் புதிய அணியாக இடம்பெற்ற புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம் பெற்று மொத்தம் இரண்டு போட்டிகளில் விளையாடி 16 ரன்களும் 2 விக்கெட்களையும் மட்டுமே கைப்பற்றினார். அதுவே அவரின் கடைசி ஐபிஎல் தொடராகவும் அமைந்தது.

Sathish Kumar:

This website uses cookies.