என் இஷ்டப்படி தான் விளையாடுவேன்.. ரூல்ஸ் போட்ட இங்கிலாந்து வீரர் !!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான அலெக்ஸ் ஹெல்ஸ், Nottinghamshire அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துவக்க வீரரும், தற்போதையை கிரிக்கெட் உலகில் தலை சிறந்து விளங்கும் வீரர்களில் ஒருவருமான அலெக்ஸ் ஹெல்ஸ், இதுவரை இங்கிலாந்து அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி.20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் Nottinghamshire அலெஹ்ஸ் ஹெல்ஸை அடுத்த இரண்டு வருடத்திற்கு தனது அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் தான் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று அலெக்ஸ் ஹெல்ஸ் ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளார்.
Nottinghamshire கிரிக்கெட் வாரியமும் அலெக்ஸ் ஹெல்ஸின் கோரிக்கையை ஏற்று, அவரை அடுத்த இரண்டு வருடத்திற்கு தனது அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய Nottinghamshire கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், நாங்கள் அலெக்ஸ் ஹெல்ஸின் முடிவை மதிக்கின்றோம், அது அவரது தனிப்பட்ட விருப்பம். அவருக்கு மாற்று வீரரை எடுப்பது குறித்து விரைவில் முடிவு செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதே போல் இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான அடில் ரசீத்தும் இதே கோரிக்கையை வைத்திருந்தார். இவரின் கோரிக்கையை ஏற்று கொண்டு மற்றொரு அணியான YORSHIRe அணி ரசீதை தனது அணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் ஹெல்ஸ் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 58 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி.20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகிறார்.