ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தது. ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் வரலாறு காணாத படுதோல்வி அடைந்து வீட்டுக்கு வெள்ளையடித்து. அதனை தொடர்ந்து நேற்று ஒரே டி20 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆடின.
ஜோஸ் பட்லரின் அதிரடி துவக்கம்
இதில் முதன்முறை இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆணி 30பந்துகளில் 61 ரன் சேர்த்து அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய துவங்கிய ஆஸ்திரேலியா அணி 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்து தவித்தது. அதன் பின் சிறப்பாக ஆடிய கேப்டன் பின்ச் 41 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 28 பந்துகளுக்கு 64 ரன்கள் எடுத்தாகவேண்டும் என்ற கட்டத்தில், கீழ் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட சேர்க்க முடியாமல் அந்த அணி 193 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரே T20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போது பதிவு செய்யப்பட்ட அனைத்து முக்கிய புள்ளிவிவரங்களும் எண்களும்:
22 – ஜோஸ் பட்லரின் 22 பந்து அரைசதம், 22 பந்துகளில் அரைசதம் இங்கிலாந்து அணிக்கு டி20 போட்டியின் அதிவேக அரைசதமாகும்.
58 – இந்த போட்டியில் மொயின் அலி விட்டுக்கொடுத்த 58 ரன்கள், டி20 போட்டியில் ஸ்பின்னர்கள் விட்டுக்கொடுத்த இரண்டாவது அதிகமான ரன்கள் ஆகும். இதற்கு முன்பு இலங்கை வீரர் ஜெயசூரியா 64 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
59 – கேன் ரிச்சர்ட்சன் விட்டுக்கொடுத்த 59 ரன்கள், ஆஸ்திரேலியா வீரர்களில் விட்டுக்கொடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்பு ஆண்ரூவ் டை 64 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
84 – ஆரோன் பின்ச் அடித்த 84 ரன்கள் தான், தோல்வியுற்ற அணியின் கேப்டன் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு ஸ்மித் 90 ரன்கள் அடித்துள்ளார்.
86 – பின்ச் மற்றும் அகர் இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். இது டி20 போட்டியில் 6வது விக்கெட்டுக்கு 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
221 – இங்கிலாந்து அணிக்கு டி20 போட்டிகளில் இது 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 230 ரன்கள் அடித்துள்ளனர்.