போட்டி நடத்தும் விதம் சரியில்லை: கங்குலிக்கு எடுத்துரைத்த சச்சின்

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் விதம் சற்றும் சரியில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் சச்சின் டெண்டுல்கர் புகார் அளித்துள்ளார். விரைவில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவில் உள்ளூர் அணிகளுக்கிடையே நடத்தப்படும் முன்னணி தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சில மாற்றங்கள் வீரர்களின் எதிர்காலத்திற்காக செய்யவேண்டும் என பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் கேப்டன் கங்குலி இடம் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

துலீப் டிராபியில் அணியின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், வீரர்கள் மத்தியில் தனிப்பட்ட சாதனைக்கான போராட்டம் மட்டுமே இருக்கிறதே தவிர, ஒட்டுமொத்த அணியாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் சற்றும் இல்லை என்றவாறு அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்ததாவது:

நான்கு நாள் நடைபெறும் இப்போட்டியில் தனி நபா் செயல்திறனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. அணியின் கூட்டுமுயற்சி முறை குறைந்துவிட்டது. மீண்டும் இப்போட்டிக்கு புத்துயிா் ஊட்ட ஏதுவாக ரஞ்சி கோப்பையில் நான்கு அரையிறுதி அணிகள் மற்றும் 19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட சிறந்த வீரா்கள் கொண்ட 2 அணிகள் என 6 அணிகள் போட்டியாக இதை மாற்றலாம்.

தற்போது 5 மண்டல போட்டியாக இருக்கும் துலிப் கோப்பையில் இந்திய புளு, கிரீன், ரெட் அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் மோதுகின்றன. பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 1-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், துலிப் கோப்பை மீது கங்குலி கவனம் செலுத்த வேண்டும்.

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டாகும். கூட்டு முயற்சியுடன் ஒரு அணியாக ஆட வேண்டும். தனி நபா்களாக இல்லை. ரஞ்சி கோப்பை சீசனுக்கு பின் இதை நடத்தலாம் என்றாா் டெண்டுல்கா்.

Prabhu Soundar:

This website uses cookies.