திருமணத்துக்கு முன்னரும் சரி திருமணத்துக்குப் பின்பும் சரி விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஜோடி ஊடக வெளிச்சத்தில்தான் உள்ளது.
அனுஷ்காவின் திரைப்பட புரோமோஷன் விழாக்களில் கோலி கவனம் செலுத்துவதும் கோலி கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ரசிகையாக கலந்துகொண்ட அவரை அனுஷ்கா உற்சாகப்படுத்துவதும் என இருவரும் பரஸ்பரம் அன்பைப் பறிமாறிக் கொள்ளும்விதம் அவர்களை ஆதர்ஷ தம்பதிகளாக அனைவர் மத்தியிலும் முன்னிறுத்துகிறது.
இந்திய கிரிக்கெட் கேப்டன் , கிங் கோலி என செல்லமாக அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் வீட்டில் எப்படி என்பதை அவரே தன் வாயால் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் கோலி மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அவரின் சிறப்பான பேட்டிங்கால் பலராலும் பாராட்டு பெற்று வருகின்றார்.
சமீபத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவை காதல் திருமணம் செய்துகொண்ட கோலி, இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் நீங்கள் வீட்டில் எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அண்மையில் கோலி அளித்த பேட்டி ஒன்றில் தன் மனைவிதான் வீட்டில் கேப்டன் எனக் கூறியிருக்கிறார். அந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த நேர்காணலைக் கண்டவர், வீட்டில் யார் கேப்டன் என கேள்வி எழுப்ப சற்றும் தயங்காத விராட், “வீட்டில் அனுஷ்காதான் கேப்டன். எங்கள் வாழ்க்கையில் மிகச் சரியான முடிவுகளை அவரே எடுக்கிறார். எனது முழு பலமும் அவர்தான். அவரே என்னை எப்போதும் நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்கச் செய்கிறார். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் இருந்து இத்தகைய பலத்தைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்முடியும்.
அனுஷ்காவுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் தெரிகிறது. விளையாட்டை அவர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதனால் விளையாட்டு வீரர்களின் உணர்வுகளை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. இதுதான் மிகவும் அழகான விஷயம்” என புன்னகையுடன் சொல்கிறார்.
– என் வாழ்க்கையில் அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது, என்னுடைய வெற்றி தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் பங்குபெறுவார், சர்ச்சைகள் பல இருந்தாலும் மைதானத்திற்கு நேரடியாக வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது என எனக்காக அனுஷ்கா செய்தது ஏராளம்.
என்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது. முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்குப் பெரிதும் உதவுவார். வீட்டில் அவர் தான் என்னுடைய கேப்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும். ‘அனுஷ்கா தான் என்னுடைய பலமே’என்று மனம் திறந்து பேசியுள்ளார், இந்திய கேப்டன் விராட் கோலி.
விராட் கோலியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.