“உனக்கு குழந்தைங்க புக் வாங்கி தரேன் படி” ட்விட்டரில் அப்ரிடியை வறுத்தெடுத்த கம்பீர்!!

காஷ்மீர் தொடர்பாக குரல் கொடுத்த சாஹித் அப்ரிடியை ட்விட்டரில் கடுமையாக வறுத்தெடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

இம்மாத துவக்கத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மசோதா ஒன்றை நிறைவேற்றி பாராளுமன்றத்தில் ரத்து செய்து ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறது.

காஷ்மீர் பகுதி மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், பாகிஸ்தான் வர விரும்புவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்து ஐ.நா சபை வரை சென்றார். ஆனால், அங்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்ப்பு இந்தியா பக்கம் சாய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பேட்டியிலும் இந்தியாவை கடுமையாக சாடி வருகிறார்.

வாரம் ஒருமுறை அரை மணி நேரம் நின்றுகொண்டு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு கரம் பாகிஸ்தான் நீட்டுகிறது என்பதை தெரிவிக்கும் வண்ணம் செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், “நமது பிரதமர் இம்ரான் கான் கூறியதை நினைவில் கொண்டு செயல்படுவோம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 மணிக்கு குறிப்பிட்ட பகுதியில் நான் இருப்பேன். என்னுடன் இணைய நினைப்பவர்கள் இணைந்து கொள்ளலாம். காஷ்மீர் பகுதி மக்களுக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்” என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், “நான் உனக்கு குழந்தைகள் புத்தகம் வாங்கி தருகிறேன். அது உனக்கு மிகுந்த உதவியாக இருக்கும்” என பதிவிட்டார்.

இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் 2007ஆம் ஆண்டும் கான்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது கடுமையாக மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.