ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி மற்றும் டிவில்லியர்சை புகழ்ந்த மெக்கல்லம்.
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் ஜோடி இணைத்து சிறப்பாக விளையாடினார்கள் என பெங்களூரு அணியின் தொடக்க வீரரான மெக்கல்லம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஐ. பி. எல் 2018 தொடரின் 3 வது ஆட்டமாக ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் எலன் கார்டன் ஸ்டேடியம் ,கொல்கத்தாவில் நடைபெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்பப்பை அடுத்து இந்த போட்டியானது நேற்று இரவு 8 மணியளவில் தொடங்கியது.இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச முடிவு செய்தார்.
பின்னர் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக் மற்றும் மெக்கல்லம் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.அதனை தொடர்ந்து காலத்தில் இறங்கிய கேப்டன் கோலி மற்றும் மெக்கல்லம் ஜோடி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.பின்னர் மெக்கலம் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களத்தில் விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணிக்கு ஒரு பக்க பலமாக அமைந்தது.விராட் கோலி 31 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரானா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா சார்பில் வினய் குமார் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் தனது ஆட்டத்தை தொடங்கியது .முதலில் களமிறங்கிய கிரிஷ் லீன் ஆட்டமிழக்க சுனில் நரேன் தனது அதிரடி ஆட்டத்தில் அரங்கையே கதிகலங்க வைத்தார்.
17 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.சுனில் நரேன். அவரை தொடர்ந்து காலத்தில் இறங்கிய கொல்கத்தா அணி வீர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் முடிவில் மீதம் 7 பந்துகள் இருக்கும் போதே கொல்கத்தா அணி வென்றது.