“பேட்டிங் பண்ண சொன்னா.. என்னங்க பண்றான்” மைதானத்தில் கடுப்பாகி எதிரணி பேட்ஸ்மேனை அடிக்கப்போன ராயுடு! டி20 போட்டியில் ரணகளம்!

சையத் முஸ்தக் அலி தொடரின் லீக் போட்டியில அம்பத்தி ராயுடு, ஷெல்டன் ஜாக்சன் இருவரும் ஒருவருக்கொருவர் களத்தில் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் டி20 தொடர்களில் ஒன்றான சையது முஸ்தக் அலி தொடர் இந்தாண்டு 6 இடங்களில் நடத்தப்படுகிறது. மொத்தம் ஐந்து பிரிவுகளில் 38 அணிகள் பங்கேற்கின்றன.

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள பரோடா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி இன்றையதினம் நடைபெற்றது.  அம்பதி ராயுடு வழிநடத்தும் பரோடா அணி 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதேஷ் பட்டேல் 60(35) ரன்களும் சொலாங்கி 51(33) ரன்களும் அடித்திருந்தனர். இந்த போட்டியில் கேப்டன் அம்பத்தி ராயுடு கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக பேட் செய்த சவுராஷ்டிரா அணிக்கு, சமர்த் வியாஸ் 97(52) அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவர் 9 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசினார். இறுதியாக 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுக்க, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஷெல்டன் ஜாக்சன் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். போட்டியின் 9வது ஓவரில் ஆத்திரமடைந்த கேப்டன் ராயுடு, ஜாக்சனிடம் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்தார். கிட்டத்தட்ட கைகலப்பு ஆகும் நிலைக்கு சென்றது.  நடுவர் ஓடிவந்து தடுக்க முயற்சித்தார். அத்துடன் சக அணி வீரர் க்ருனால் பண்டியாவும் ஓடிவந்து தடுத்தார். இதன் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

பின்னர் தான் இந்த வாக்குவாதத்திற்கான முக்கிய காரணம் என்னவென்று தெரிய வந்திருக்கிறது. ஷெல்டன் ஜாக்சன் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு பந்திற்கும் மற்றொரு பந்திற்கும் இடையே தயார் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓரிரு ஓவர்கள் பொறுத்துக் கொண்ட ராயுடு, அதன் பின்னர் தான் ஆத்திரமடைந்து, ‘ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறாய்?’ என அவரிடம் சத்தமாக கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு பந்திற்கும் நேரம் எடுத்துக் கொண்டால், இறுதியில் பந்து வீசும் அணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசவில்லை என்ற நிலை ஏற்படலாம். ஓவர் ரேட் அடிப்படையில், இருபதாவது ஓவரில் அபராதமாக, ஒரு வீரர் வட்டத்திற்கு உள்ளே வைக்க வேண்டும் என்ற நிலையும் வரலாம். இது ஏற்பட்டுவிடக்கூடாது  என்பதற்காக ராயுடு கேள்வி கேட்டிருக்கிறார்.

 

Mohamed:

This website uses cookies.