போதும்டா சாமி இதுக்குமேல முடியாது… தோனியை முந்திய அம்பத்தி ராயுடு! – சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

ஐபிஎல் பைனலுக்கு முன்பாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் அம்பத்தி ராயுடு. ஐபிஎல் முடிந்தவுடன் செய்கிறாராம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2018ஆம் ஆண்டிலிருந்து பயணித்து வரும் அம்பத்தி ராயுடு, சில சீசனங்களில் ஓப்பனிங் இறங்கியுள்ளார். சில சீசனங்களில் மிடில் ஆர்டரில் இறங்கி நம்பிக்கை அளித்துள்ளார். 2018 மற்றும் 2021 ஆகிய இரு சீசன்களில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் விளையாடி உள்ள அம்பத்தி ராயுடு, 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். இதுவரை 202 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 22 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 4329 ரன்கள் அடித்துள்ளார்.

2023 சீசன் அவருக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பைனலுக்கு வந்திருக்கிறது. இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், 37 வயதாகும் அம்பத்தி ராயுடு குஜராத் அணிக்கெதிராக பைனல் முடிந்தவுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ராயுடு பதிவிட்டதாவது:

“இரண்டு பெரிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் 14 சீசன்களில் விளையாடி, 11 பிளே-ஆப் சுற்றுக்களுக்கு சென்று, எட்டு முறை பைனலில் விளையாடி, ஐந்து முறை கோப்பையையும் வென்றுள்ளேன். ஆறாவது முறை இன்று வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். என்னுடைய பயணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

மேலும் இன்று ஐபிஎல் பைனலில் விளையாடுவதே என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி என்பதை நான் முடிவு எடுத்திருக்கிறேன். அனைத்துமே எனக்கு மிகச்சிறந்த ஐபிஎல் தொடராக இதுவரை அமைந்திருக்கிறது.  அனைவருக்கும் நன்றி. இந்த முடிவை திரும்ப பெறமாட்டேன்.” என்றார்.

தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடுவிற்கு உரிய மரியாதை கொடுத்து வழி அனுப்ப சிஎஸ்கே அணி முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கிறது.

Mohamed:

This website uses cookies.