அம்பத்தி ராயூடுவிற்கு ஆறுதல் கூறிய விரேந்திர சேவாக் !!

அம்பத்தி ராயூடுவிற்கு ஆறுதல் கூறிய விரேந்திர சேவாக்

உலகக் கோப்பை போட்டியில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது நிச்சயம் வலியை தரக் கூடிய ஒன்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவித்தபோது, நடுவரிசை வீரருக்கு அம்பத்தி ராயுடு அறிவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என 3 வகையான பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் காயமடைந்த ஷிகர் தவணுக்கு பதிலாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அணிக்கு மாயங் அகர்வால் அழைக்கப்பட்டிக்கிறார்.

இதனால் ஏமாற்றமடைந்த அம்பத்தி ராயுடு கிரிக்கெட்டிலிருந்து இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவுக்கு ஆதரவாக லஷ்மன், கைஃப், கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராயுடுவின் ஓய்வு குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகக் கோப்பை போட்டியில் அம்பத்தி ராயுடு புறக்கணிக்கப்பட்டது நிச்சயம் வலியை தரக் கூடிய ஒன்று.

ஆனால் ஓய்வுக்கு பிறகு அவர் வாழ்வில் சிறந்தவை கிடைக்க நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.