ஜுனியர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆலோசகராக பணியாற்ற இங்கிலாந்து செல்கிறார் அம்பட்டி ராயுடு!!
இங்கிலாந்தில் உள்ள புரோ கோச் யார்க்ஷையர் அகாடமி சார்பில் 17 வயதுக்குட்பட்ட சர்வதேச ஜூனியர்ஸ் அகாடமி கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி நடத்தப்படுகிறது. வருகிற 9-ந் தேதி இந்தப் போட்டி தொடங்குகிறது.
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் பேர்டியில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளோடு சென்னையை சேர்ந்த அணியும் கலந்து கொள்கிறது. 16 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அம்பதி ராயுடு சேர்க்கப்பட்டிருந்தார். ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடுவுக்கு, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டாப் ஃபெர்மான்ஸ் கொடுத்தவர் அம்பதி ராயுடு. மொத்தமாக 602 ரன்கள் குவித்த ராயுடுவின் ஆவரேஜ் 43. ஸ்டிரைக் ரேட் 149.75. மற்ற ஐபிஎல் அணிகளுக்கு மிக அபாயகரமான வீரராக விளங்கிய ராயுடு, யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது ஜுனியர் சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு உள்ளார். வருகிற 5-ந்தேதி ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.