அந்த நாளுக்காக தான் வெறித்தனமா காத்திருக்கேன்; அமித் மிஸ்ரா சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பெற ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா, கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஐ.பி.எல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அமித் மிஷ்ரா, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆவலுடன் காத்திருப்பாதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமித் மிஷ்ரா சமீபத்தில் அளித்த் பேட்டி ஒன்றில் கூறியதாவது;
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறும் நாளுக்காக காத்திருக்கிறேன். அதற்காக தான் முயற்சித்தும் வருகிறேன். வெறும் ஐ.பி.எல் தொடருக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் நான் கிடையாது. இந்திய அணி எப்பொழுது அழைத்தாலும் உடனே அணியில் சேர காத்துள்ளேன். இந்திய அணியில் நிச்சயம் மீண்டும் இடம்பிடிப்பேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்போதும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகியே இருப்பேன். பொதுவாக வாழ்க்கையில் சோர்ந்திருக்கும்போது ஒரு சிலர் மட்டுமே உங்களை ஊக்கப்படுத்துவார்கள். அதற்காக நாம் காத்திருக்காமல் நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடினமான உழைப்பை கொடுக்க பாடுபட வேண்டும். என்னை பொறுத்த வரையில் சாதிப்பதற்கு வயது என்பது ஒரு தடையே கிடையாது” என்றார் அமித் மிஷ்ரா.
37 வயதாகும் அமித் மிஷ்ரா, கடைசியாக விளையாடிய சையத் முஸ்தாக் அலி டிராபியின் பெரும்பாலான போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதும், ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.