உலகக் கோப்பை போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் நிகழ்த்தினார்.
இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் டூபிளஸ்ஸிஸ் உடனே பந்தை தாஹிரிடம் அளித்து பந்துவீசுமாறு பணித்தார். அகடந்த 1992 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானஆட்டத்தில் 2-ஆவது ஓவரை வீசினார் நியூஸி சுழற்பந்து வீச்சாளர் தீபக் பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா அணிக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பேரிஸ்டோவ் டக் அவுட் ஆனாலும், ராய்(54), ரூட்(51), மோர்கன்(57) மற்றும் ஸ்டோக்ஸ்(89) அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. தென்னாப்ரிக்கா தரப்பில் நெகிடி 3 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 312 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்ரிக்கா அணி விளையாடியது. டி காக், ஆம்லா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலே ஆர்ச்சர் பந்துவீச்சில் தலையில் அடிபட்டு ரிட்டையர் ஹட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரம் 13, கேப்டன் டு பிளிசிஸ் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டி காக், துசென் ஜோடி சற்று நேரம் தாக்குப் பிடித்தது. டி காக் 68 ரன் எடுத்து அவுட் ஆனார். துசென் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
எதிர்பார்க்கப்பட்ட டுமினி 8 ரன்னில் நடையை கட்டினார். பெலுக்வயோ சற்று நேரம் தாக்குப் பிடித்து 24 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்ரிக்கா அணி 39.5 ஓவரில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் சாய்த்தார். பிளங்கட், ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.