இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2 தென்னாப்பிரிக்க வீரர்கள் அவுட்! போட்டிக்கு முன்பே முன்னனியில் இந்தியா!

இங்கிலாந்தில் 12-வது உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 2 லீக் ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லாவின் ஹெல்மெட் பட்டையில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்ஸர் பந்துபட்டது. இதனால் அன்றைய போட்டியில் அவர் விளையாடாமல் சென்றார்.  தற்போது வரை ஆம்லா ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக இன்னும் குணமடையவில்லை.

இந்த சூழலில் அணியில் முக்கிய பந்துவீச்சாளரான லுங்கி இங்கிடி வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்  4 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வறைக்குச் சென்றவர் கடைசி வரை திரும்பவில்லை. பீல்டிங் செய்தபோது, விழுந்ததில் அவரின் காலில் தசைப்படிப்பு ஏற்பட்டது என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த தசைப்பிடிப்பு குணமடைய ஒருவாரம் வரை ஆகலாம் என்பதால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிடி விளையாட மாட்டார்

 

தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளர் முகமது மூசாஜே கூறுகையில், ” இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விளையாடமாட்டார். அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு இன்னும் குணமாகவில்லை, அதற்கு சில நாட்கள் ஆகலாம் ஆதலால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டதில் அவருக்கு ஓய்வு அளித்துள்ளோம். நாளை ஸ்கேன் செய்து பார்த்தபின் காயத்தின் முழுமையான தன்மை அறிந்து மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா எனத் தெரிவிப்போம். அதற்குள் குணமாகிவிடுவார் இங்கிடி என நம்புகிறோம்.

 

ஹல்மெட்டில் பந்துபட்டதால், தலையில் லேசாகக் காயம் அடைந்து ஓய்வில் இருந்து வரும் ஹசிம் ஆம்லாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டாரா என்பது குறித்து இப்போது கூற இயலாது.

தோள்பட்டை காயத்தில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் குணமடைந்து வருகிறார் அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக முழுமையாக குணமடைந்துவிடுவார் என நம்புகிறோம் ” எனத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள்பட்டை காயத்தில் இருந்து ஓரளவுக்கு குணமடைந்துவிட்டநிலையில், விளையாட வாய்ப்புள்ளது, ஆனால், ஆம்லா குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆம்லா, இங்கிடி விளையாடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

Sathish Kumar:

This website uses cookies.