டி.20 உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் இந்திய அணிக்கு முக்கியம்; விவிஎஸ் லக்‌ஷ்மண் சொல்கிறார் !!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியதாவது, வருகிற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மிகப் பெரும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்தார்

காயம் காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டி20 போட்டியிலிருந்து மீண்டும் விளையாடத் தொடங்கினார்.

அதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளாமல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

இவரின் அபாரமான பந்து வீச்சு கிரிக்கெட் வல்லுநர்கள் பலரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எப்படி ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயத்திலிருந்து குணமாகிய பின் எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளாமல் தான் இறங்கிய முதல் போட்டியிலேயே இவ்வாறு செயல்படுகிறார் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் 4.66 மற்றும் 6.39 ஆகிய எக்கனாமிக் ரேட்டை மெயின்டெயின் செய்தார்.

இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்ததாவது, நானும் புவனேஸ்வர் குமாரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கும்போது அவரை எனக்கு நன்றாக தெரியும், கடந்த இரண்டு வருடங்களாக புவனேஸ்வர் குமார் மிகவும் சிரமப்பட்டார், பின் களமிறங்கிய இவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அசத்தினார்.

ஒரு வேகப்பந்துவீச்சாளர் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் சிறப்பாக செயல்படுவது என்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் புவனேஸ்வர் குமார் இதை செய்து முடித்தார். நேஷனல் கிரிக்கெட் அகடமியில் மிகவும் கடினமான பயிற்சியை மேற்கொண்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். இவருடைய புகழுக்கு இவர் தகுதியானவர் என்று பாராட்டினார். மேலும் இந்திய அணி எப்பொழுதெல்லாம் தின அழுகிறதோ அப்பொழுதெல்லாம் மிக சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறார், எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமார் மிகப் பெரும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.