அப்படியொரு அதிரடிக்கு பிறகு… இங்கிலாந்து அணி தோல்வியுற இந்த 3 சம்பவம் தான் காரணம்! முழுவிவரம் இதோ..

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கொடுத்தபிறகும் படுதோல்வியை சந்தித்தது ஏன்? என்பதற்கான மூன்று காரணங்களை இங்கு காண்போம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து மிகப்பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான ராய் மற்றும் பர்ஸ்டோ இருவரும் துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 14.2 ஓவர்களில் 135 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு சேர்த்தது. அதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கான மூன்று முக்கிய காரணங்களை நாம் இங்கு பார்ப்போம்.

  1. கிட்டத்தட்ட 40 ஓவர்கள் வரை நன்றாக பந்துவீசி வந்த இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் கடைசி ஏழு ஓவரில் 90 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தனர். இதுவே தோல்விக்கு முதல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது
  2. நல்ல துவக்கம் கொடுத்தபிறகு யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 11 பந்துகளை வீணடித்து வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது இங்கிலாந்து அணியின் ரன் குவிக்கும் வேகத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது.
  3. தாக்கூர் வீசிய 23வது ஓவரில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார் அதன்பிறகு களத்தில் இருந்த அதிரடி வீரர்கள் மார்கன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தாகூர் வீசிய 25வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிகப்பெரிய துவக்கம் கிடைத்தும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் இப்படி சொதப்பி அதனால் இங்கிலாந்து அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. இது தோல்விக்கான மூன்றாவது காரணமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி செய்த இந்த மூன்று தவறுகள் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக அமைய முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.

Mohamed:

This website uses cookies.