தென்னாப்பிரிக்க அணியில் உள்ள இந்திய வீரர் கேசவ் மகராஜ் எப்படி தென்னாப்பிரிக்க சென்றார் தெறியுமா?
தென்னாப்பிரிக்க அணியில் மகராஜ் என்ற பெயரை கேட்டவுடன் கண்டிப்பாக அவர் ஒரு இந்தியாராக இருப்பார் என்று தானே நினைக்கிறோம். ஆம் அது உண்மை தான். அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். கேசவ் மகராஜின் மூதாதையர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான்
கேசவ் மகராஜ் தற்போது தென்னாப்பிரிக்க அணியுன் ஸ்பின் டிபார்ட்மென்டின் தூணாக இருந்து வருகிறார். தென்னாப்பிரிக்க அணி விளையாடிய கடைசி 5 தொடர்களில் இவர் தான் அந்த அணியின் நட்சத்திர வீரர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் இந்த இந்திய வம்சாவளி வீரர். வெறும் 15 டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னராக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூல புகழ் வெளிச்சத்திற்கு வந்த கேசவ் இன்னும் பல ஆண்டுகள் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சினை கட்டுக்குள் வைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
அவருடைய மூதையர்கள் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்க நாடு ஒன்றுமே இல்லாத ஒரு பொட்டல் காடா இருந்தபோது அந்த நாட்டை முன்னேற்ற பல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
மேலும் இந்தியாவை போல ஒரு பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்தது. இதனால் அந்த நாட்டை முன்னேற்றும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு பிரிட்டிஸ்காரர்கள் பல நாடுகளில் இருந்து திறமையான வேலையாட்களை தென்னாப்பிரிக்க மண்ணிற்கு கடத்தினார்.
முக்கியமாக இந்தியாவில் உள்ள திறமையான வேலையாட்களை தென்னாப்பிரிக்க மண்ணிற்கு கூலிகளாகவும் அடைமகளாகவும் அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவர்தான் கேசவ் மகராஜின் தந்தையின் தந்தையின் தந்தை.
1874ஆம் ஆண்டு இவர் தென்னாப்பிரிக்க மண்ணில் கூலிக்காக வந்த இறங்கினர். அதன் பின்னர் தான் அவரது குடும்பம் தென்னாப்பிரிக்கவில் செட்டில் ஆனது.
கேசவ் மகராஜின் தந்தது ஆதமானந்த் மகராஜ் தென்னாப்பிரிக்காவில் உள்ள க்வாஸுலு நாடல் மாகாண கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி உள்ளார். அவரது மனைவி தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ளார்.
மேலும், கேசவின் அக்கா தரிஷமா இலங்கையின் தொழில் அதிபர் மகஸீன் என்பருடன் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கேசவின் குடும்பம் இந்தியா வருவதில்லை. தென்னாப்பிரிக்க மண்ணின் மைந்தர்களாக மாறிவிட்டனர்