விக்கெட் வீழ்த்துவதில் புதிய சரித்திர சாதனை படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டி மூலம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சரித்திர சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரனாகியுள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 331 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெய்ஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட் சதம் அடித்து கைகொடுத்ததன் மூலம் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த போது டிக்ளெர் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து 464 ரன்கள் எடுத்த வெற்றி என்ற சாத்தியமில்லாத இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிகர் தவான் 1 ரன்னிலும், பின்னர் வந்த புஜாரா மற்றும் கோஹ்லி ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் வெளியேறினர்.
இதில் புஜாரா மற்றும் தவானை அடுத்தடுத்து வெளியேற்றிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 563 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருந்த கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் கிளன் மெக்ராத்தின் சாதனையை அதே 563 விக்கெட்டுகளுடன் ஆண்டர்சன் சமன் செய்து இந்த பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியல்;
ஜேம்ஸ் ஆண்டர்சன்;
இங்கிலாந்து அணியின் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 563 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.