வெஸ்ட் இண்டீஸில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் ஆகிய அணிகள் மோதினர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் அடித்தது. பின்னர் 171 ரன்கள் இலக்கு களமிறங்கிய செயின்ட் லூசியா அணி 16.4 ஒவரிலே 171 ரன்கள் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரசல் 14 வது ஓவரின் ஹார்டஸ் வில்ஜோன் வீசிய பவுன்சர் பந்தை அடிக்காமல் விட்டார்.இதனால் அந்த பந்து ரசல் ஹெல்மேட் வலது புறத்தில் உள்ள காது பக்கம் அடித்தது.பந்து அடித்த வேகத்திலே ரசல் சுருண்டு கீழே விழுந்தார்.
பின்னர் மைதானத்திற்கு வந்த மருத்துவ குழு ரசலை ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றனர்.பிறகு சிடி ஸ்கேன் பரிசோதனையில் பலத்த காயம் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறினார்.ரசல் ஓய்வு எடுக்கவேண்டும் என கூறினார்கள்.
பின், ரஸ்ஸல்-ஐ தூக்கிச் செல்ல ஸ்ட்ரெட்சர் எடுத்துக் கொண்டு வந்தனர். பின்னர் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ரஸ்ஸல். ஸ்கேன் முடிவுகளின் படி எந்த சிக்கலும் இல்லை என்ற தகவல் வந்த பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
எனினும், ரஸ்ஸல் மருத்துவர்களின் அறிவுரைப்படி இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுதப்பட்டுள்ளார். ரஸ்ஸல் பாதியில் வெளியேறிய நிலையில், அவரின் ஜமைக்கா அணியும் போட்டியில் தோல்வி அடைந்தது.
சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித் இதே போல ஹெல்மட்டில் பந்து தாக்கி காயமடைந்து, ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே வெளியேறி, பின் சில வாரம் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.