சச்சினுக்கு ஏற்பட்ட அவமானம், இளைஞர் செய்த செயல்;வீடியோ உள்ளே !!


டெல்லியில் நடக்கும் விவசாய மசோதாவுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் கடந்த சில நாட்களாக உக்கிரத்தை அடைந்து வருகிறது,விவசாயிகளுக்கு ஆதரவாக பலதரப்பட்ட மக்களும் இயக்கங்களும் தனது கருத்தைத் தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில் டெல்லியில் நடக்கும் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகின் பல நாடுகளில் இருக்கும் பிரபலங்களும் தனது கருத்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர், குறிப்பாக கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க நாட்டின் பாடகி ரிஹானா மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் போன்ற பலரும் தனது கருத்தை விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக சச்சின் ,விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய அணியின் வீரர்கள் பலரும் தனது கருத்தை தெரிவித்தது ஆச்சரியப்படுத்தியது, குறிப்பாக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் போட்ட ட்விட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சச்சின் போட்ட பதிவு என்னவென்றால் ”இந்தியாவின் இறையாண்மையை யாருடனும் சமாதானம் செய்ய முடியாது, வெளிப்புற சக்திகள் பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும் அவர்கள் பங்கேற்பாளர்கள் அல்ல, மேலும் இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றி நன்றாக தெரியும், நாம் ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.


இந்தப் பதிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்புக்கு சச்சின் உள்ளாகினார், இந்நிலையில் காங்கிரஸ் அணியின் எதிர்ப்பாளர்கள், இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவரின் கட்டவுட் ஒன்றை மையையும் எண்ணெயை ஊற்றியும் அவமானம் செய்தானர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த இளைஞரின் செயலுக்கு பலரும் தனது அதிர்ப்தியை தெரிவித்து கொண்டுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.