இலங்கை அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனா ஆஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் நியமனம்
கடந்த சகல மாதங்களுக்கு முன்னர் இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய ஆஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் அந்த அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தோற்றது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்ற ஆஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், ஜிம்பாப்வே அணியுடன் மீண்டும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தன் சொந்த மண்ணிலேயே 3-2 என தோற்று மண்ணை கவ்வியது.
இதன் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியை ராஜினமா ஸுரஹார் மேத்யூஸ். அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் சண்டமால் கேப்டனாக நிடமிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பலரிடம் கை மாறிய இலங்கை அணி கடைசியாக ஆல் ரவுண்டர் திசரா பெரேராவிடம் வந்து சேர்ந்தது. தற்போது அந்த அணிக்கு ஆஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்டடுள்ளார். இந்திய அணியிடம் அதிகமான தோல்விகளை கண்டது.
கேப்டன் பொறுப்புகளை மாற்றி கொடுத்து பாரர்த்து இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சென்ற வருடம் மட்டும் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 37 போட்டிகளில் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது இலங்கை அணி.
இதன் காரணமாக அந்த அணியின் பயிச்சியாளர் நிக் போத்தஸ் நீக்கப்பட்டு அந்த அணியின் முன்னாள் வீரர் சண்டிகா ஹத்ரசிங்கா நியமிக்கப்பட்டர்.
தற்போது இந்த பயிச்சியாளர் கேட்டுக் கொண்டதான் பேரில் தான் மீண்டுக கேப்டன் பதவிக்கு வந்திருப்பதாக கூறினார் மேத்யூஸ்.