தமிழகத்தில் மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் ! பிசிசிஐ-விற்கு கடிதம் எழுதிய கிரிக்கெட் வாரியம் !
புதுச்சேரி மாநிலத்திற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அதற்கென தனி ஒரு கிரிக்கெட் வாரியமும் அல்லது கிரிக்கெட் நிர்வாகமோ இல்லை. லோதா கமிட்டியின் படி புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ தலைமையில் உருவாக்கப்பட்டு தற்போது உள்ளூர்களில் பல முக்கியமான தொடரில் விளையாடி வருகிறது. இதற்காக கிரிக்கெட் கட்டமைப்பை மிகச்சிறந்த வகையில் தங்கள் மாநிலத்தில் உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் மேலும் புதுச்சேரியில் மட்டும் மின்சார கோபுர விளக்குகளுடன் மொத்தம் ஆறு மைதானங்கள் இருக்கின்றன. இதனை வைத்து சர்வதேச போட்டிகளை தாங்கள் நடத்த விரும்புவதாக புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரி கடிதம் எழுதியிருக்கிறது.
அந்த கடிதத்தில் “எங்கள் கிரிக்கெட் சங்கம் பல அழகான கிரிக்கெட் மைதானங்களை கட்டியிருக்கிறது. மாபெரும் மின்சார விளக்கு கோபுரம் கொண்ட ஆறு மைதானங்களிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக உள் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களையும் நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறப்போகிறது.
இதற்காக எங்களது மைதானத்தையும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் சர்வதேச போட்டிகளை நாங்கள் நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த முன்னெடுப்பு சிறிய மைதானங்கள் மற்றும் சிறிய நகரங்கள் வளர்ச்சி அடைய மிகப் பெரும் உதவியாக இருக்கும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் மொத்தம் ஆறு மைதானத்தில் இரண்டு பெரிய மைதானங்களில் உயிர் பாதுகாப்பு வளையத்தை தங்களது செலவில் வழங்கி போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
தற்போது இருக்கும் ஒட்டுமொத்தமாக சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரை 6 மைதானங்களில் நடத்தி முடிக்கலாம் என்று அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் தர போட்டிகளில் மொத்தம் இருக்கும் 6 மைதானங்களையும் தர தயாராக இருக்கிறோம். அனைத்தும் தற்போது தயாராக இருக்கிறது. மேலும் 4 முதல் 5 அணிகள் தொடர்ந்து ஆறு மாதங்கள் தங்கும் வகையில் 4 ஸ்டார் ஹோட்டல்கள் அருகிலேயே இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது.