இந்திய அணி இங்கிலாந்து செல்லும் பொழுது அனுஷ்கா சர்மா செல்லவில்லை. சொந்த வேலையின் காரணமாக இந்தியாவில் தங்கிவிட்டார். ஆனால், தற்போது மீண்டும் விராத் மற்றும் குழுவுடன் இனிய இங்கிலாந்து சென்றுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 மாதங்கள் கொண்ட நின்ற தொடரில் பங்கேற்க உள்ளது. ஜூலை முதல் வாரம் தொடங்கி செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை இந்த தொடர் நீடிக்கும்.
இதில், 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. முதல் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாம் போட்டி ஜூலை 6ம் தேதி துவங்க உள்ளது.
முதல் போட்டியில் அசத்திய குலதீப் மற்றும் சதம் விளாசிய ராகுல் இருவரும் அடுத்த போட்டிக்கு நிச்சயமாக சேர்க்கப்படுவார்கள். சரிவர செயல்படாத வீரர்கள் மாற்றப்பட்டு அடுத்தப்போட்டிக்கு வேறு வீரர்கள் களமிறக்கப்படுவர் என கோலி திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த தொடரில் இந்திய வீரர்களுடன் அவர்களது மனைவிகளும் உடன் செல்லுவர். ஆனால், ஆரம்பத்தில் அனுஷ்கா சர்மா இந்திய அணியுடன் செல்லவில்லை. தற்போது தான் சென்றிருக்கிறார். இரண்டு மாதங்கள் தங்கி கோலியின் விளையாட்டை ரசிக்க உள்ளார்.
இதற்கு முன்பு இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா தொடருக்கும் இந்திய அணியுடன் சென்றார் அனுஷ்கா ஷர்மா.