2018 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கி வரும் மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து தொடரிலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை தற்போது ஆசியக் கோப்பை கிரிக்கெட்டுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.
முந்தைய ரஞ்சி சீசனிலும் 2000 ரன்களுக்கும் மேல் குவித்தார் மாயங்க் அகர்வால், விஜய் ஹசாரே டிராபியிலும் இந்தியா ஏ அணிக்கும் அபாரமாக ஆடி வருகிறார்.
ஆனாலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, ப்ரித்வி ஷா உள்ளிட்டோருக்கு உள்ள லாபி பாவம் மயங்க் அகர்வாலுக்கு இல்லை போலும்.
இந்நிலையில் இதைச் சூசகமாகத் தட்டிக் கேட்ட ஹர்பஜன் சிங் தன் ட்விட்டரில்,
”மாயங்க் அகர்வால் எங்கே? ஏகப்பட்ட ரன்களைக் குவித்துள்ளார், ஆனால் நான் அவரை இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இன்னமும் பார்க்கவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு கணக்கு போலும், ஒவ்வொரு ரூல் போலும், அப்படித்தான் நான் நினைக்கிறேன்.”
என்று பதிவிட்டுள்ளார்.
2018 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கி வரும் மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்து தொடரிலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை தற்போது ஆசியக் கோப்பை கிரிக்கெட்டுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.
முந்தைய ரஞ்சி சீசனிலும் 2000 ரன்களுக்கும் மேல் குவித்தார் மாயங்க் அகர்வால், விஜய் ஹசாரே டிராபியிலும் இந்தியா ஏ அணிக்கும் அபாரமாக ஆடி வருகிறார்.ஆனாலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, ப்ரித்வி ஷா உள்ளிட்டோருக்கு உள்ள லாபி பாவம் மயங்க் அகர்வாலுக்கு இல்லை போலும்.