ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக விமர்சனம் செய்த யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான்! டென்ஷனாகப் போகும் ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்கு வருடங்களாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தற்போது வரை பெரிதாக எந்த ஒரு செயல்பாடுகள் என்றாலும் அவரது திறமையை பெரிதாகப் பேசப்படுகிறது. அதேபோல் தற்போது உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ்.
அனைத்து விதமான போட்டிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார் தற்போது நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஒரே போட்டியில் 256 ரன்களும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவினை பதிவு செய்து இருந்தார் இர்பான் பதான். அதாவது பென் ஸ்டோக்ஸ்சை போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்திய அணியை உலகில் எந்த ஒரு இடத்திலும் வீழ்த்திவிட முடியாது என்று தெரிவித்து இருந்தார்.
இதனை பார்த்த யுவராஜ் சிங், அப்படி என்றால் இந்திய அணியில் அப்படி ஒரு ஆல்ரவுண்டர் இல்லை என்கிறீர்களா? இருந்தால் யார் அந்த ஆல்ரவுண்டர்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த இர்பான் பதான் அப்படி ஒருவர் இருந்தார் அவர் பெயர் யுவராஜ்சிங், அவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்று கூறினார் .
இந்தியாவில் அப்படி ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது இருவரும் சமூக வலைத்தளத்தில் அவர் பெயர் குறிப்பிடாமல் அவரை கலாய்த்து வருகின்றனர். இதனை எப்போதாவது ஹர்திக் பாண்டியா பார்ப்பார். இந்த மூவருக்கும் பெரிதாக நட்பு கிடையாது இதனால் டென்சன் ஆகப்போகும் கார்த்திக் பாண்டியா இருவருக்கும் ஏதாவது பதிலடி கொடுப்பார் என்றே தெரிகிறது.