சர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசிய அர்ஜூன் நாயருக்கு இடைக்கால தடை
பிப்பேஸ் டி.20 தொடரில் ரைசிங் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் அர்ஜூன் நாயர், பந்து வீசுவதற்கு இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் டி.20 தொடரை போன்றே ஆஸ்திரேலியாவிலும் பிக்பாஸ் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ரைசிங் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் அர்ஜூன் நாயர், சர்ச்சைக்குரிய வகையில் பந்துவீசுவதால் அவரை சர்வதேச கிரிக்கெட் கவுனில் சஸ்பெண்ட் செய்துள்ளது.
பிக்பாஸ் லீக்கில், ஹூரிகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜூன் நாயர் வித்தியாசமாக பந்து வீசியதை கவனித்த போட்டி நடுவர்கள் இது குறித்து கிரிக்கெட் வாரியம் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே இவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் பந்து வீசும் முறை சரியானது தானா என்று பிரிஸ்பேனில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆயவு செய்ய உள்ளது.
இவர் மீதான இந்த தடை 90 நாட்கள் வரை இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே வேளையில் இந்த தடை இவர் பந்து வீசுவதற்கு மட்டும் தான் இவர் தொடர்ந்து சிட்னி அணிக்காக பேட்டிங் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அர்ஜூன் நாயர், நான் ஒரு பேட்ஸ்மேன் தான், பந்து வீச்சு என்பது எனக்கு கூடுதல் பலமே தவிர, நான் முழுநேர பந்துவீச்சாளர் இல்லை. சமூக வலைதளங்களான யூ டியூப் உள்ளிட்டவைகளை பார்த்து தான் நான் பந்து வீச கற்றுக்கொண்டேன், சிறு வயதில் இருந்தே இதே போன்று தான் பந்து வீசி வருகின்றேன். என்று தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் பேட்டிங்கில் தனது முழு கவனத்தையும் செலுத்த திட்டமிள்ளதாகவும் அர்ஜூன் நாயர் தெரிவித்துள்ளார்.