அர்ஜுன் ரணதுங்க குற்றச்சாட்டு எதிரொலி ! இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் 2011 உலக கோப்பை இறுதி போட்டி- ஐ விசாரணை அமைக்க விருப்பம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரணதுங்க 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி யார் வெற்றி ஆக வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இறுதி போட்டி என்று குற்றம் சாட்டிருந்தார் . இதை தொடர்ந்து இலங்கை-இன் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அந்த போட்டியை விசாரணை செய்ய தனது விருப்பத்தை கடந்த புதன் கிழமை ( ஜூலை 19) அறிவித்திருக்கிறார் .

” யார் வேண்டுமெண்டாலும் புகார் தெரிவிக்கலாம் நான் தயராக இருக்கிறேன் விசாரணை அமைக்க உத்திரவு பிறப்பிக்க ” ரணதுங்க இவாறு பத்திரிகை காரர்களிடம் தெரிவித்தார் . முன்னாள் அணி தலைவர் அர்ஜுன்  ரணதுங்க தனது முடிவில் மிகவும் உறுதியாக உள்ளார்

முன்னதாக அர்ஜுன் ரணதுங்க 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி பற்றி கேள்வி எழுப்பி இருந்தார் . இலங்கை அணிக்கு உலக கோப்பை வாங்கி தந்த கேப்டன் ரணதுங்க -வும் 2011 உலக கோப்பை இறுதி போட்டி நடந்த வாஙகாடே மைதானத்தில் இருந்தார் . அவர் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்த காணொளி-இல் இதை தெரிவித்திருந்தார் . அவரும் இறுதி போட்டி நடந்த மைதானத்தில் இருந்ததாகவும் ,போட்டி முடிவு குறித்து சந்தேகம் இருந்ததாகவும் , விசாரணை அவசியம் வேண்டும் எனவும் தனது புகாரை தெரிவித்து இருந்தார்

 

 

” நானும் அந்த நேரத்தில் இந்தியாவில் தான் இருந்தேன் வர்ணையாளராக , நாங்கள் தோல்வி அடைந்த பொது நான் மிகவும் கவலை அடைந்தேன் ,எனக்கு மிகவும் சந்தேகம் இருந்தது ”
” நாம் கண்டிப்பாக இலங்கை-கு 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் என்ன நடந்தது என விசாரணை நடத்த வேண்டும் . இப்பொழுது என்னால் அனைத்தயும் வெளியிட முடியாது , ஆனால் ஒரு நாள் நான் வெளியிடுவேன் அப்போது கண்டிப்பாக விசாரணை இருக்கும் ” இவ்வாறு ரணதுங்க பத்திரிகை காரர்களிடம் தெரிவித்தார் .

2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின . இலங்கை அணியில் ஜெயவர்த்தேனே 103 ரன்கள் அடித்தார் இதனால் 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்து. பிறகு இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் கம்பீர் 97 ரன்களும் கேப்டன் தோனி 91 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்கள்.இந்திய அணி பத்து பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றியை ருசித்தது . இந்த வெற்றி இந்திய அணிக்கு இரண்டாவது உலக கோப்பை -ஐ பெற்று தந்தது . இந்திய அணிக்கு உலக புகழ் மிக்க வெற்றியாக அமைந்தது .

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி யார் வெற்றி ஆக வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இறுதி போட்டி என்று குற்றம் சாட்டை தொடர்ந்து இலங்கை-இன் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தனாண்ட அழுதகமகே வும் தனது குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்

இந்த அரசியல்வாதி-யும் இந்தியா & இலங்கை-கும் நடந்த இறுதி ஆட்டத்தில் இருந்தார் . அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி-இன் போது அவர் இந்த புகாரை தெரிவித்தார் . இலங்கை அணியின் மூத்த வீரர் -களில் ஒருவர் ஓய்வு அறையில் 50 ஓவர் முழுமையாக புகை புடித்து கொண்டிருந்தார் மற்றும் அணி தலைவர் எந்த வித காரணமும் இன்றி போட்டி முடிந்ததும் தனது பொறுப்பை இராஜினாமா செய்ய கட்டாய படுத்தப்பட்டார் .

“அடுத்ததாக அணியின் மிகவும் மூத்த வீரரின் நடத்தை கேள்வியை எழுப்பியது . போட்டியின் போது அளிக்கப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்கள் நிராகரிக்கப்பட்டது ” இவ்வாறு மஹிந்தனாண்ட அழுதகமகே அந்த வீரர் -களின் பெயர்களை குறிப்பிடாமல் தெரிவித்தார் .

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும்  விளையாட்டு துறை அமைச்சர் -களின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் மிக பெரிய அதிர் அலைகளை உருவாக்கி உள்ளது .

Asvin M: The man who changed his passion into reality.

This website uses cookies.