ஹரியானா வீரருக்கு அரெஸ்ட் வாரன்ட் பிறப்பித்தது இந்திய கடற்ப்படை

ஹரியான அணிக்காக ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடி வரும் ஆல் ரவுண்டர் தீபக் புனியாவை கைது செய்யச் சொல்லி அவர் மீது அரெஸ்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது இந்தியக் கடற்ப்படை. ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இருக்கிறார் தீபக்.

இந்த வருட ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஹரியான அணிக்காக ஆடி வருபவர் ஆல்ரவுண்டர் தீபக் புனியா. அவர் இந்தியக் கடற்படையில் (மும்பை மண்டலம்) அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது 24 வயதான அவர் இந்த வருடத்திற்கு மமுன்னர் இரண்டு வருடமாக சௌராஸ்டிரா அணிக்காக ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடி வந்தார். மேலும், நேவியில் இருப்பதால் அந்த மண்டலத்தில் உள்ள மாநிலத்தைத் தவிற வேரு இரு மாநிலத்திற்கு ஆட முடியாது. ஆனால், விடுப்பு எடுத்து ஆடலாம்.

இதனை மனதில் வைத்து முதலில் 30 நாள் விடுப்பு எடுத்து ஹரியானா அணிக்காக ஆடினர் தீபக். அதன் பின்னர் மேலும், ஆட விடுப்பு கேட்ட போது அவருக்கான விடுப்பு தரப்படவில்லை. இதனால், அவர் ‘நோ அப்ஜெக்சன் சர்டிஃபிகேட்’ வாங்காமல் சென்று கிரிக்கெட் ஆடுகிறார் எனக் கூறி அவரை கைது செய்ய உத்தவிட்டிருகிறது இந்தியக் கடற்படையில் மும்பை மண்டலம்.

பொதுவாக ஒரு பொதுத்துறை நிறுவனத்திலோ அல்லது அர்சு அலுவலகத்திலோ பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வேறு வேலை (கிரிக்கெட் விளையாடுதல் மற்றும் பல) செய்ய வேண்டுமானால் அங்கு ஆட்வதேற்கு ஆட்சேபனை இல்லை என்ற நோ அப்ஜெக்சன் சான்றிதல் பெற வேண்டும். இந்த முறை தீபக் புனியா அந்த சானிதல் பெறவில்லை.

ஏனெனில், இந்த வருடத்திற்க்காக நோ அப்ஜெக்சன் சான்றிதால் பெறத் தெவையில்லை, சென்ற வருடம் சமர்பித்த அந்த சான்றிதல்களே போதும் எனக் கூறிவிட்டது பி.சி.சி.ஐ. இதனால் நோ அப்ஜெக்சன் சான்றிதல் பெறாமல், விடுப்பு மட்டும் கோரி தற்போது ஹரியானா ரஞ்சி அணிக்காக ஆடி வருகிறார் தீபக். மேலும், தீபக் இன்னும் விடுப்பு கேட்டபோது அதனை மறுத்தது மட்டுமில்லாமல் நோ அப்ஜெக்சன் சான்றிதல் பெறாமல் வேறு மாநில அணிக்காக ஆடி வருகிறார் எனக் கூறி அவரை கைது செய்து அவர் பணிபுரியும் கப்பலுக்கு அழைத்து வரச் சொல்லி மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது இந்தியக் கடற்படை.

இது குறித்து ஐ.என்.எஸ் ஆங்க்ரி கப்பலின் தலைவர் மற்றும் கமான்டிங் ஆபீசர் விடுத்த கைது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடற்படை சட்டம் 1957 ஆம் ஆண்டு சட்டத்தின் படி அவர் செய்தது ஒரு குற்றமாகும். அவரை கைது செய்து குறிப்பிட்ட பணிபுரியும் கப்பலுக்கு அழைத்து வந்து அதற்க்கான விளக்கத்தை கேட்க வேண்டும். அதனை வைத்து சட்டப்படி மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து பிசிசியை அதிகாரி கூறியதாவது,

இந்த வருடத்திற்கான நோ அப்ஜெக்சன் சான்றிதல் வாங்கப்படவில்லை. சென்ற வருடத்தில் அவருக்காக சௌராஸ்டிரா அணி சமர்பித்த அந்த சான்றிதலை வைத்து தீபக் புனியாவிற்கு ஆடும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனக் கூறினார் அவர்.

 

Editor:

This website uses cookies.