ஹர்திக் பாண்டியா இதற்கு சரிபட்டு வரமாட்டார்! சீண்டும் ஆகாஶ் சோப்ரா!

இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரில் அவ்வளவு சிறப்பாக ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் அந்த 9 ஓவர்களில் அவர் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 5 ஓவர்கள் அவர் வீசினார். 5 ஓவர்களில் மொத்தமாக 43 ரன்கள் விட்டுக்கொடுத்து மறுபடியும் ஒரு விக்கெட் மட்டுமே அவர் கைப்பற்றினார். பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை என்று தற்போது ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும்

முதுகில் அடிபட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு நீண்ட காலமாகவே ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. அவரது உடல் பந்து வீச்சுக்கு ஏற்ப ஒத்துழைக்கவில்லை. அதன் காரணமாகவே அவரால் முன்பு போல சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறு ஓவர்கள் ஹர்திக் பாண்டியா வீசினார். இருப்பினும் அதற்கு அடுத்து ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் மீண்டும் பந்து வீசுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், முன்பு போல அற்புதமான பந்து வீச்சை அவர்களின் படுத்த தவறுகிறார் என்பது வேதனை அளிக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

மீண்டும் பழைய பாண்டியா தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார்

ஹர்திக் பாண்டியா உடலில் இன்னும் தயாராக வேண்டும், பேட்டிங்கில் எந்தவித பிரச்சனையும் இல்லை ஆனால் பௌலிங் விஷயத்தில் அவர் இன்னும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தற்பொழுது கூறியிருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியா கூடிய விரைவில் உடல் அளவில் தயாராகி முன்பு போல சிறப்பாக பந்து வீசினால் இந்திய அணிக்கு அது சற்று பலமாக அமையும்.

உலக கோப்பை டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா அவ்வளவு எளிதில் நாம் வெளியே எடுத்துவிட முடியாது. எனவே நிச்சயமாக கூடிய விரைவில் அவர் பழைய பாண்டியாவாக அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம் அனைவரையும் அசர வைப்பார் என்று இறுதியாக ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.