எனது வெற்றியின் ரகசியம் இதுதான்! ஓப்பனாக பேசிய ரிஷப் பன்ட்

கடந்த ஓராண்டாக தன்னுடைய டெஸ்ட் கேரியரில் கடின உழைப்பை போட்டதாகவும், அது தனக்கு பயன் தந்ததாகவும் ரிஷப் பண்ட் விளக்கம்

2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு களமிறங்கி விளையாடினார். முதல் டெஸ்ட் உடலிலேயே மிக அற்புதமாக விளையாடிய இந்திய நிர்வாகம் மத்தியிலும் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பெயரை அவர் எடுத்துக்கொண்டார். இருப்பினும் அதற்கு அடுத்து ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் அவர் அவ்வளவு சரியாக விளையாடவில்லை. இதன் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப் படாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து தற்போது வரை இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ரிஷப் பண்ட் உயர்ந்திருக்கிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் கடந்த ஒரு ஆண்டு காலமாக நிறைய உழைப்பை தன்னுடைய டெஸ்ட் கேரியரில் தான் செலுத்தியதாகவும் அது தனக்கு நல்ல பயனைத் தந்து உள்ளதாகவும் அன்மையில் கூறியுள்ளார்

முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் அது நிச்சயமாக நமக்கு பலன் தரும்

இது சம்பந்தமாக சந்தித்துப் பேசிய ரிஷப் பண்ட், ஆரம்பத்தில் நான் என்னுடைய முழு திறமையை காண்பித்து இந்திய அணியில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்றேன். அதற்குப் பின்னர் இடையில் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் என்னுடைய முழு திறமையை காண்பித்தபோதிலும் அது சரிவர அமையவில்லை.

எப்பொழுதும் நாம் நினைத்தது நடந்து விடாது என்றும், அப்படி நிகழும் வேளையில் மனம் உடையாமல் நம்முடைய முழு உழைப்பை தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அது நிச்சயமாக என்றாவது ஒருநாள் பயன் தரும் என்ற விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய உழைப்பு கடந்த ஒரு ஆண்டு காலமாக அதிகமாக இருந்தது. அந்த உழைப்பு தனக்கு இப்போது பயன் தந்து உள்ளதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்க போகும் ரிஷப் பண்ட்

தற்பொழுது வரை இருபத்தி ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1403 ரன்கள் குவித்துள்ளார் அதில் ஆறு அரை சதங்களும் 3 சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆவரேஜ் 43.84 என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக களம் இறங்கி டெஸ்ட் போட்டியில் விளையாடியவர் மீண்டும் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறார். இதன் மூலமாக டெஸ்ட் கேரியரில் அவருடைய நான்காவது ஆண்டில் அவர் கால் வைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது (2021 – 2023) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் லீக் போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.