ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரசீத் கான்
ஆஃப்கானிஸ்தான் டி.20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரசீத் கானை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 அணிகளுக்கு கேப்டனாக அஸ்கார் ஆப்கான் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கிவிட்டு மூன்று அணிக்கும் மூன்று கேப்டன்களை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் இன்று நியமித்துள்ளது.
அதன்படி குல்பாடின் நைப், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் துணை கேப்டனாக ரஷித் கானும் டெஸ்ட் அணி கேப்டனாக ரமத் ஷாவும் துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 கேப்டனாகவும் துணைக்கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல் தொடர் உலகக்கோப்பைக்கு உதவும் – பெஹண்ட்ரூஃப் நம்பிக்கை;
ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேன்டர்ப். 28 வயதாகும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். முதல்போட்டியிலே அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தூக்கினார். 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றி முத்திரை படைத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளதால் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரேன்டர்ப் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பது என்பது உறுதியல்ல. இது எனக்கு உறுதியாகத் தெரியும். ஐபிஎல் தொடரில் ‘பெர்மார்மன்ஸ் செய்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
இதுகுறித்து பெரேன்டர்ப் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பது என்பது உறுதியல்ல. இது எனக்கு உறுதியாகத் தெரியும். ஐபிஎல் தொடரில் ‘பெர்மார்மன்ஸ் செய்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.” என்றார்.
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பது என்பது உறுதியல்ல. இது எனக்கு உறுதியாகத் தெரியும். ஐபிஎல் தொடரில் ‘பெர்மார்மன்ஸ் செய்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.” என்றார்.