மெல்போர்னில் நாளை தொடங்க இருக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டாக்கிற்குப் பதிலாக ஜேக்சன் பேர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் மூன்று போட்டிகளிலும் தனது வேகப்பந்து வீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தவர் மிட்செல் ஸ்டார்க். இவருக்கு வலது காலின் குதிக்காலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.
அச்சப்படக் கூடிய அளவிற்கு காயத்தில் வீரியம் இல்லை என்றாலும், தொடர்ந்து விளையாடினால் பெரிய ஆபத்து ஏற்படுத்தக்கூடிய காயமாக மாற வாய்ப்பு உள்ளது என்பதால் மெல்போர்ன் டெஸ்டில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்க்கிற்குப் பதிலாக ஜேக்சன் பேர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா தென்ஆப்பரிக்கா செல்ல இருக்கிறது. அப்போது ஸ்டார்க்கின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதால் தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.